Video Gallery

                
               
               
               
               

Facebook Videos

Teacher's day celebration

இறைவனால் இம்மனித குலத்திற்கு ஏவப்பட்ட முதல் விடயம் "கற்பீராக" (இக்ரஹ்) இவ் அளப்பெரும் கடமையை தன்மீது பறைசாற்றிக் கொண்டு சமூகத்திற்கு எத்திவைப்பதற்காக 

தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அத்தனை ஆசிரியர்களையும் மதித்து கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்...

எந்தவொரு வெற்றியாளனின் வரலாற்றைப் புரட்டினாலும் அதில் அவன் வெற்றிக் கனியை பார்ப்பதற்காக தன்னை ஏணியாய் அர்ப்பணித்த ஒரு ஆசிரியரின் சரிதை உறங்கிக் கிடக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு சமூக மேம்பாட்டுக்காகவும் , வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் உன்னத நோக்கோடு #கிண்ணியா_வாழ்_மற்றும்_கிண்ணியாவில் பணி புரிகின்ற சகல ஆசிரியர்களையும் கௌரவிப்பதற்காக கிண்ணியாவின் சமூக எழுச்சி நிறுவனங்களான சமூக மற்றும் கல்விக்கான வலையமைப்பு (SEN), கிண்ணியா நெட், AHFA, Call for Open Dialog (COD) இணைந்து எதிர்வரும் சர்வதேச ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்காக வெகு விமர்சையான கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாம் ஒவ்வொருவரும் இன்று நல்ல பிரஜைகளாக வாழ்வதற்கு ஏதோ ஒரு ஆசிரியரே அடித்தளமாக திகழ்கிறார்.  எனவே ஆசிரியர்களை கௌரவிக்க வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உரித்தானது.

ஆகவே இன்ஷா அல்லாஹ் இக் கௌரவிப்பு விழாவை வெற்றிகரமாக நடாத்த உங்களின் பங்களிப்பும், துஆக்களும் கிடைக்கும் என்று நம்புகின்றோம்...

Connect With Us Today

Keep in touch with us via Social media