Video Gallery

                
               
               
               
               

Facebook Videos

Teacher's day celebration

(Abdulsalam yaseem)


திருகோணமலை மாவட்டத்தில் எல்லைக்கிராமமான ரொட்டவெவ கிராமத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரபுக் கல்லூரி எவ்வுத அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றது.

சுமார் 40 மாணவர்கள் கல்வி பயிலும் இந்த கல்லூரியில் குர்ஆனை மனனம் செய்யும் 21 மாணவர்களுக்கும் இரண்டு மௌலவிமார்களும் தற்போது கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிள்ளைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களுக்கு இருந்த போதிலும் "வறுமை" தலைவிதியாக மாறியுள்ளது. இருந்தபோதிலும் தமது பிரதேசத்தில் மத்ரஸா இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இரண்டு மௌலவிமார்களும் படும் கஸ்டத்தை சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை திரு நாட்டில் முஸ்லிம் தனவந்தர்கள் இருந்தும் ஏன் நாங்கள் கல்வியில் பின்னடைய வேண்டும்.

மார்க்க கல்வியை மட்டுமல்லாமல் உலக அறிவையும் பெற்று கொள்வதற்காக மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வியையும் புகட்டும் ஓர் கல்லூரி எமது பிரதேசத்தில் இயங்குகிறது. நாம் ஒன்று பட்டு சிறார்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் செயற்பட முன் வர வேண்டும்.

Connect With Us Today

Keep in touch with us via Social media