பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சகலரும் முழுமையான இலங்கை பிரஜைகள் தான், அவர்களை இந்திய வம்சாவழியினர் என இரண்டாம் தரமாக பார்ப்பது தவிர்க்கப் படல் வேண்டும். இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் பெருந்தோட்டத்துறையின் பங்களிப்பு குறித்து அறியாத எவரும் இருக்க மாட்டார்கள்.

அவர்களது நியாயமான சம்பள உயர்வுக் கோரிக்கைகளை முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களின் சந்தை நிலவரங்கள் மற்றும் அரசியல் இலாப நஷ்டங்களினைக் கருத்தில் கொண்டு மாத்திரம் தீர்மானிக்க முடியாது.


பெருந்தோட்டங்களினை நம்பி அவர்களது சந்ததிகள் இந்த நாட்டில் வாழவும் முடியாது, எனவே நாட்டின் பல பாகங்களிலும் அவர்களுக்கு பெருந்தோட்டங்களுக்கு வெளியே புதிய கிராமங்களை வாழ்வாதார மற்றும் தொழில் முயற்சி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து தோட்ட முதலாளிமாரின் கட்டடிமைத் தனத்திலிருந்து விடுவிப்பதற்கான தேசிய வேலைத் திட்டமொன்று அவசியம்.


இந்திய வம்சாவழியினர் என்ற காரணத்தினால் இந்திய அரசின் உதவிகளை மாத்திரம் நம்பியிராது எதரி வரும் வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான நிதியொதுக்கீடுகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். இன மொழி மத கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அரசிற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் தருதல் வேண்டும்!

News Feeds

Connect With Us Today

Keep in touch with us via Social media