யாழ்ப்பாணம் அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையர்களினால் கூர்மையான ஆயுதங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் தந்தை மற்றும் மகள் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையர்கள் கொள்ளைடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News Feeds

Connect With Us Today

Keep in touch with us via Social media