இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மத்தியில், நாட்டு மக்களின் நன்மை கருதி பொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.நிதி அமைச்சு அதிகாரிகள் மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இதேவேளை அண்மையில் அறிமுகப்படுத்திய எரிபொருள் சூத்திரத்தை புதிய அரசாங்கத்தின் கீழ் இரத்து செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

News Feeds

Connect With Us Today

Keep in touch with us via Social media